top of page

Sivagamiyin Sabhatham

 

Dance Drama

 on 8th Apr 2017 at Umarupulavar Tamilmozhi Nilaya Arangam at 6.30pm

as part of Singapore Tamilmozhi Vizha 2017

Please support the event by attending the shows.

Praapthi is proud to have provided event management support

Review: FB post by Kannan Seshadiri

சிவகாமியின் சபதம் -நாட்டிய நாடகம்

 

எப்படி இந்த நாவலை இரண்டு மணிநேரத்தில் குறைவான வசதிகளோடு மேடையேற்றுவார்கள் என்ற முதல் கேள்வி குறி மனதில். இரண்டாவது ,வழக்கமாக தமிழ் நிகழ்ச்சிகளில் காணும் தமிழ் ஆர்வர்களையும் காணோம் எப்படி ஆதரவு கிடைக்கிம் என்ற இரண்டாவது வினாவோடு அரங்கில் நுழைந்தோம் நானும் என் மனைவியும் அரங்கில் சுமாரான கூட்டம், இருக்கை கிடைத்தது. சிறிது நேரத்தில் அரங்கு மிழிவதும் நிறைந்து படிகளில் உட்காரும் நிலை ஏற்பட்டது.

விளக்குகள் அணைக்கபட்டு வழக்கமான சம்பிரதாயம் ஏதுமின்றி தமிழ் தாய் வாழ்த்தோடு துவங்கி, கதை அறிமுகத்துடன் நாடகத்திற்குள் நுழைந்தனர். இனிய தமிழிசை பாடல்களுக்கு அபிநயம் பிடித்த சிறார்கள் அற்புதம் என் எண்ணும் வேளையில் சிவகாமியின் அறிமுக நடனம். ஆகா!ஆகா! என்ன நளினம்.

தொடர்ந்த நாடகத்தில் அனைத்து பாத்திரங்களும் வைரமாய் மின்னினர். நாக நந்தி, பல்லவ மன்னன், நந்தினியின் அப்பா சிற்பி, தளபதி அனைவரின் நடிப்பும். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதிலும் நந்தினியும், பல்லவ இளவரசனும் சிறப்போ சிறப்பு. நந்தினியாக நடித்து நடனமாடிய திருமதி அமிர்தினி சிவஹரன், அப்பப்பா என்ன நளினம் என்ன நடிப்பு. நாகநந்தி தொட வரும் போது கூசுகின்றது போல் காட்டும் பாவம், நம் உடலும் கூசியது போல் உணர்ந்தேன். பல்லவ மன்னனும், சிற்பியும் பேசிக்கொண்டிருக்கும் போது நந்தினியும், இளவரசனும் கண்களாம் பேசும் காதல் மொழி என்ன ஒரு அபிநயம். இனி எப்போது சிவகாமியின் சபதம் படித்தாலும் நந்தினியாக மன கண்னில் நிற்க்கபோகிறவர் திருமதி. அமிர்தினி சிவஹரன் தான்.

சுவாமி சாஸ்வதானந்தாவில் தமிழ்  என்ன இளமை, என்ன கம்பீரம். இவர்களின் தமிழுக்கு எந்தன் வணக்கங்கள் கோடி.

இயக்கியவர் திருமதி பவானிகுகபிரியா, திருஷ்டி சுத்தி போட்டுக்கொள்ளுங்கள் உங்கள் அணியோடு. பாடல் பாடியவர்கள், பக்க வாத்தியம், பின்னனி இசை, ஒளி அமைப்பு அனைத்தும் பிரமிக்க வைத்தன. நாடகம் முடிந்த போது மொத்த அரங்கும் எழுந்து நின்று அளித்த கரவொலி அடங்க 10 நிமிடம் ஆனது.

 

மொத்தத்தில் இந்த நிகழ்ச்சிதான் இந்த வருட தமிழ் மொழி விழா மகுடத்தை அலங்கரிக்கப் போகும் கோகினூர் வைரம். சியாமா சிங்கப்பூர் மற்றும் தியாகராஜர் கலைகோவில் அமைப்பினருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி

Review: Tamil Murasu
bottom of page